×

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைணவ சான்றிதழ் படிப்புக்கு ஜன.21 வரை விண்ணப்பிக்கலாம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

சென்னை: இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டப்பேரவை  மானியக் கோரிக்கையின் போது சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ரூ.1 கோடியே 50 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக திருவல்லிக்கேணி  பார்த்தசாரதி கோயிலில் வைணவ (வைகானசம்) ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்து வைணவ கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.  பயிற்சி பெறும் மாணவர்கள் பயிற்சி நிலைய வளாகத்திலேயே தங்கி பயில வேண்டும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவருக்கு இலவசமாக உணவு, சீருடை, உறைவிடம், பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் உதவித் தொகை ஆகியவை வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்ப படிவங்களை   www.hrce.tn.gov.in என்ற  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 21.1.2022. இந்த வைணவ பயிற்சி வகுப்புகளில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Tiruvallikeni Parthasarathy Temple ,Department of Hindu Religious Affairs , Candidates can apply for Vaishnava Certificate Course at Tiruvallikeni Parthasarathy Temple till Jan. 21: Department of Hindu Religious Affairs Notice.
× RELATED திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்...