விஜய் ஹசாரே பைனல்: தமிழ்நாடு-இமாச்சல் பலப்பரீட்சை

ஜெய்பூர்: விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட்  போட்டியின் இறுதி ஆட்டம் இன்று ஜெய்பூரில் நடக்கிறது. அதில் தமிழ்நாடு-இமாச்சல் பிரதேசம் அணிகள் களம் காண உள்ளன. விஜய் ஹசாரே கோப்பையை அதிக முறை கைப்பற்றிய அணியாக தமிழ்நாடு திகழ்கிறது. இதுவரை 5 முறை கோப்பையை வென்ற தமிழ்நாடு 6வது முறை  கோப்பையை கைப்பற்ற 7வது முறையாக பைனலில் விளையாட உள்ளது. அதற்கு அதற்கேற்ப விஜய் சங்கர் தலைமையில்  தினேஷ் கார்த்திக், வாஷிங்டன், ஜெகதீசன், ஹரிநிஷாந்த், அபரஜித், ஷாருக்கான், இந்தரஜித், சாய்கிஷோர், சிலம்பரசன், சித்தார்த் என தமிழக வீரர்கள் தொடர்ந்து பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் கலக்கி வருகிறது. அதனால் காலிறுதி, அரையிறுதியில் இறங்கிய அதே அணி இன்றும் களம் காணக் கூடும். கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ள அணியாக தமிழ்நாடு உள்ளது. இருப்பினும் முதல்முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ள இமாச்சல் பிரதேசமும் முன்னணி அணிகளை மண்ணை கவ்வ வைத்துள்ளது. ரிஷி தவான் தலைமையிலான இமாச்சல் அணியில் கடைசிவரிசை வீரர்களும் அசத்தி வருகின்றனர். ரிஷி, சோப்ரா, திக்விஜய், ஆகாஷ், சித்தார்த் ஆகியோர் சிறப்பாக விளையாடுவது தமிழ்நாட்டுக்கு சவாலாக இருக்கும்.

Related Stories: