கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் சார்பில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் சார்பில் கவரப்பேட்டையில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ விண்ணப்ப படிவங்களை வழங்கினார். திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் சார்பில் கவரப்பேட்டை பகுதியில் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கி.வே.ஆனந்தகுமார் ஏற்பாட்டில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. இதில் பொறுப்பு குழு உறுப்பினர் இளங்கோ, ஒன்றிய துணைச் செயலாளர்கள் திருமலை, பாஸ்கரன், வேதாச்சலம், கணேசன், கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் நமச்சிவாயம், மாவட்ட பிரதிநிதி காளத்தி, மாவட்ட கவுன்சிலர் சாரதம்மா முத்துசாமி, ராமஜெயம், மாவட்ட பிரதிநிதி காளத்தி, இஸ்மாயில், முன்னாள் அமைப்பாளர் சதிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 10 ஆயிரம் இளைஞர்களை திமுகவில் உறுப்பினராக சேர்க்க படிவம் வழங்கினார். நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை திமுகவில் உறுப்பினராக  இணைத்துகொண்டனர். இதில் ஒன்றிய கவுன்சிலர் அமலா சரவணன், ஜோதி, ஹரி, சிட்டிபாபு, நிர்வாகிகள் மெதூர் முத்துக்குமார், கோகுல்நாத், லோகேஷ் முத்துப்பாண்டி உள்பட 100க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள், முன்னோடிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: