×

பூந்தமல்லிக்கு புதிய நகர செயலாளர் நியமனம்: டிடிவி.தினகரன் அறிவிப்பு

சென்னை: பூந்தமல்லிக்கு புதிய நகர செயலாளரை நியமித்து டிடிவி.தினகரன் உத்தரவிட்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட பூந்தமல்லி நகர அமமுக செயலாளராக, ஏ.பி.ஜாகிர் அப்பாஸ் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பூந்தமல்லி நகர செயலாளருக்கு தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Bonthamalli ,TTV ,Dinagaran , Appointment of new city secretary for Poonamallee: DTV.Dhinakaran announcement
× RELATED சொல்லிட்டாங்க…