×

சென்னை, திருநெல்வேலி, பழனி ஆகிய இடங்களில் ரூ.47.8 கோடி மதிப்பீட்டில் புதிய கருணை இல்லங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை, திருநெல்வேலி, பழனி ஆகிய இடங்களில் ரூ.47.8 கோடி மதிப்பீட்டில் புதிய கருணை இல்லங்கள் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின்போது, சென்னை, திருநெல்வேலி, பழனி ஆகிய இடங்களில் மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் அனைத்து வசதிகளுடன் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

இதுகுறித்த ஆலோசனை கூட்டம் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. அறநிலைய துறை முதன்மை செயலர் சந்தரமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சென்னை வில்லிவாக்கத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 19.1 கோடி மதிப்பீட்டிலும், திருநெல்வேலி அபிஷேக் நகரில் சுமார் 2.86 ஏக்கர் பரப்பளவில் ரூ.13.5 கோடி மதிப்பீட்டிலும்,

பழனியில் சுமார் 1.72 ஏக்கர் பரப்பளவில் ரூ.15.2 கோடி மதிப்பீட்டிலும் கருணை இல்லம் கட்டுவதற்கு பெருந்திட்டம் வரைபடம் மூலம் அவசர மையம், கோயில், நடைபாதை, தியான மண்டபம், தங்கும் அறை, குடிநீர், கழிப்பறை, தொலைக்காட்சி அறை, பார்வையாளர்கள் அறை, உடற்பயிற்சி சிகிச்சை, வாகனம் நிறுத்துமிடம், தோட்டம், உணவருந்தும் அறை, சமையலறை, நூலகம், மின்தூக்கி, பசுமை வெளி உட்பட பல்வேறு வசதிகள் குறித்து விளக்கப்பட்டது. இதில் சில மாற்றங்கள் செய்து பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுரை வழங்கியுள்ளார்.


Tags : Chennai ,Tirunelveli ,Palani ,Minister ,Sakerbabu , New charities to be set up in Chennai, Tirunelveli and Palani at an estimated cost of Rs 47.8 crore: Minister Sekarbabu
× RELATED மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!!