கொல்கத்தா பேலூர் மடத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்: விவேகானந்தரின் போதனைகளை மேற்கோள்காட்டி விளக்கம்

ஹவுரா: மேற்குவங்கத்தில் விவேகானந்தர் நிறுவிய ராமகிருஷ்ணா மடத்தின் பிரசித்திபெற்ற பேலூர் மடத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. ஹவுரா மாவட்டத்தில் ஹுப்ளி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த மேடம், இந்து துறவிகளின் சரணாலயமாக கருதப்படுகிறது. அங்கு கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்றும் அங்கு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அதன் நிர்வாகி சஞ்சய் கௌஸ், பேலூர் மடத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவதை சில வலதுசாரி இயக்ககங்கள் விமர்சனம் செய்து சர்ச்சையாக்குகின்றன. அவர்களுக்கும், அனைவருக்கும் சொல்வது என்னவென்றால் மிகசிறந்த விஸ்வாசம், மிகசிறந்த பாதை, இறைவனை அடையும் வழி என்ற சுவாமி விவேகானந்தரின் போதனைப்படியே கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: