பஞ்சாப் நீதிமன்ற குண்டுவெடிப்பில் பலியானவர் முன்னாள் போலீஸ்!: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்..மாநில டிஜிபி விளக்கம்..!!

லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்ட நீதிமன்றத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலியான நபர் காவல் துறையில் பணியாற்றி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்றும் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர் மீதான போதைப்பொருள் வழக்கு ஆவணங்களை அளிக்க குண்டுவெடிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். லூதியானா நீதிமன்றத்தில் கடந்த 23ம் தேதி வியாழனன்று குண்டுவெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த அந்த நபர் பெயர் ககன் தீப் சிங் என்றும் அவர் பஞ்சாப் காவல்துறையில் தலைமை காவலராக பணியாற்றி வந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் 2019ம் ஆண்டில் இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து சண்டிகரில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பஞ்சாப் டி.ஜி.பி. நீதிமன்ற வளாக குண்டுவெடிப்பில் காலிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதனிடையே குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்டது ஐ.இ.டி. வகை வெடிகுண்டு என்பது ஆராய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் குண்டுவெடிப்பு தொடர்பாக லூதியானா நீதிமன்ற வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் பலியான ககன் தீப் சிங் தவிர மேலும் சிலருக்கும் இந்த குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

Related Stories: