ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை

சென்னை; ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை  தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்;

* சர்வதேச பயணிகள் 14 நாட்களுக்கு முன்பே பயண விவரத்தை பதிவிட வேண்டும்

* 3 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் வந்திருக்க வேண்டும்

* பரிசோதனையில் எஸ் வகை மரபணு கண்டறியப்பட்டால் ஓமிக்ரான் ஆய்வு மேற்கொள்ளப்படும்

* கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் 7 நாட்கள் வரை வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்

* பிற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் உத்தேச பரிசோதனை

* கொரோனா அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் சுகாதாரத்துறையை அணுக வேண்டும்

* தொற்று உறுதியான நபரின் முன், பின் இருக்கைகளில் பயணித்தவர்களுக்கும் பரிசோதனை

* நோய் பாதிப்புகள் அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: