×

57ம் ஆண்டு நினைவு தினம் தனுஷ்கோடி கடலில் நினைவஞ்சலி

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவாக நேற்று தெற்கு கடற்கரையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.1964, டிச.23ம் தேதி நள்ளிரவில் தனுஷ்கோடியில் பயங்கர புயல் காற்று வீசியது. இதில் உள்ளூர் மக்கள், ரயிலில் பயணம் செய்த வெளியூர் பயணிகள் என நூற்றுக்கணக்கானோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இதன் 57ம் ஆண்டு நினைவுநாளையொட்டி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தனுஷ்கோடி தெற்கு கடற்கரை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செல்லத்துரை தலைமை வகித்தார். மீன்வளத்துறை ராமநாதபுரம் துணை இயக்குனர் காத்தவராயன், திமுக நகர் செயலாளர் நாசர்கான், காங்கிரஸ் தலைவர் நம்புராஜன் மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர், மீனவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். அப்போது பலியானவர்களின் நினைவாக கடலில் மலர்தூவி பிரார்த்தனை செய்தனர்.



Tags : Dhanushkodi Sea , 57th Anniversary Commemoration at Dhanushkodi Sea
× RELATED இலங்கையில் இருந்து 7 பேர் தனுஷ்கோடி வருகை