×

வைகை அணைப் பூங்காவில் ஓராண்டாக முடங்கி கிடக்கும் சிறுவர் ரயில் : மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை, சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் பொழுது போக்கு ஏராளமான அம்சங்கள் உள்ளன. அணையின் முன்புறம் வலது மற்றும் இடது கரை பூங்கா என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சிறுவர் பூங்கா, பெரியார் மாதிரி வைகை பூங்கா, யானை சறுக்கல், நீருற்றுகள், புல்தரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு அம்சங்கள் உள்ளன. இதில், வலதுகரைப் பகுதியில் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் சுற்றிபார்க்கும் வைகை உல்லாச ரயில் உள்ளது.

இந்த ரயில் கடந்த ஓராண்டாக மேலாக செயல்படாமல் உள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். இந்த ரயிலில் பயணம் செய்ய பெரியவர்களுக்கு ரூ.10, சிறுவர்களுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த ரயில் ஓராண்டுக்கு முன் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இயங்கி வந்தது. ஆனால், காலப்போக்கில் செயல்படாமல் முழுமையாக முடங்கிக் கிடக்கிறது. மேலும், ரயில் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், ரயில் மற்றும் அதன் தண்டவாளங்கள் புதர்மண்டிக் கிடக்கிறது. எனவே, பூங்கா பகுதியில் உள்ள சிறுவர் ரயிலை பராமரித்து சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags : Vaigai Dam Park , Paralyzed in Vaigai Dam Park for a year Lying children's train : Request to take action again
× RELATED கடும் வெயிலால் வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு