×

காட்பாடி அருகே பொன்னை ரயில்வே பாலம் பழுது காரணமாக 22 ரயில்கள் தற்காலிகமாக ரத்து

சென்னை: காட்பாடி அருகே பொன்னை ரயில்வே பாலம் பழுது காரணமாக 22 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. முக்கிய ரயில் பாதையில் பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காட்பாடி அடுத்த திருவலம் பொன்னை ஆற்றின் குறுக்கே உள்ள ரயில் பாலத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பாலம் சீரமைப்பு பணியில் தற்போது வரை 60% பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். பழுதான பாலத்தின் 38 மற்றும் 39வது தூண்களை கான்கிரிட் மூலம் பலப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்:

1. ரயில் எண்: 12007 - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 25, 26 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

2. ரயில் எண்: 12008 - மைசூர் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 25, 26 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

3. ரயில் எண்: 12243 - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்   டிசம்பர் 25, 26 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

4. ரயில் எண்: 12244 - கோயம்புத்தூர் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 25, 26 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

5. ரயில் எண்: 22625 - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 25, 26 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

6. ரயில் எண்: 22626 - பெங்களூரு - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 25, 26 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

7. ரயில்  எண்: 12027 - கேஎஸ்ஆர் பெங்களூரு - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 25, 26 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

8. ரயில் எண்: 12028 - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 25, 26 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

9. ரயில் எண்: 22649 - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 24, 25 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

10. ரயில் எண்: 22650 - ஈரோடு - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 24, 25 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

11. ரயில் எண்: 12695 - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 25ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

12. ரயில் எண்: 12696 திருவனந்தபுரம் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 25ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

13. ரயில் எண்: 22637 - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மங்களூர் சென்ட்ரல் சூப்பர்ஃபாஸ்ட் மேற்கு கடற்கரை ரயில் டிசம்பர் 25, 26 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

14. ரயில் எண்: 22638 - மங்களூர் சென்ட்ரல் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சூப்பர்ஃபாஸ்ட் மேற்கு கடற்கரை ரயில் டிசம்பர் 25, 26 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

15. ரயில் எண்: 16085 - அரக்கோணம் - ஜோலார்பேட்டை MEMU  எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 25, 26 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

16. ரயில் எண்: 16086 - ஜோலார்பேட்டை - அரக்கோணம் MEMU எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 25, 26 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

17. ரயில் எண்: 16089 - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 25, 26 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

18. ரயில் எண்: 16090 - ஜோலார்பேட்டை - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ஏலகிரி ரயில் டிசம்பர் 25, 26 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

19. ரயில் எண்: 06033 - சென்னை கடற்கரை - வேலூர் கண்டோன்மென்ட் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் டிசம்பர் 25, 26 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

20. ரயில் எண்: 06034 - வேலூர் கண்டோன்மென்ட் - சென்னை பீச் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் டிசம்பர் 25, 26 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

21. ரயில் எண்: 12671 - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 25ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

22. ரயில் எண்: 12672 - மேட்டுப்பாளையம் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 25ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : Golden Railway Bridge ,Qatbadi , trains
× RELATED காட்பாடி மற்றும்...