×

மைசூர்- சென்னை உட்பட 7 தடங்களில் புல்லட் ரயில்: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவு

புதுடெல்லி: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமாக, மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத் வரையில், ரூ.1.10 லட்சம் கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், டெல்லி - வாரணாசி, அயோத்தி உட்பட நொய்டா வழியாக ஆக்ரா - லக்னோ வரையிலான 942 கிமீ, பாட்னா வழியாக வாரணாசி முதல் அவுரா (760 கிமீ.), ஜெய்ப்பூர் வழியாக டெல்லி முதல் அகமதாபாத் (886 கிமீ), சண்டிகர், லூதியானா, ஜலந்தார் வழியாக டெல்லி முதல் அமிர்தசரஸ் (459 கிமீ), நாசிக் வழியாக மும்மை முதல் நாக்பூர் வரை (740 கிமீ), புனே வழியாக மும்பை முதல் ஐதராபாத் (711 கிமீ) மற்றும் பெங்களூரு வழியாக சென்னை முதல் மைசூர் (435 கிமீ) ஆகிய 7 வழித்தடங்களில் புல்லட் ரயில் சேவையை வழங்குவதற்கு ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

 2022-2023ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த திட்டங்கள் குறித்த அறிவிப்புக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி-வாரணாசி வழித்தடத்திற்கான திட்ட அறிக்கையை, கடந்த நவம்பரில் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சமர்ப்பித்து விட்டது. மற்ற திட்டங்களுக்கான அறிக்கைகளை தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. 2023ம் ஆண்டுக்குள் இது முடியும் என தெரிகிறது.

Tags : Mysore ,Chennai , Mysore, Chennai, Bullet Train, Detailed Project Report, Order
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...