×

நாட்டின் முதல் ஏவுகணை கப்பல் 32 ஆண்டு சேவைக்குப் பின் விடைபெற்றது ஐஎஸ்என் குக்ரி

புதுடெல்லி: உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதலாவது ஏவுகணை தாங்கிய கப்பலான ஐஎன்எஸ் குக்ரி தனது 32 ஆண்டுகால சேவைக்குப் பின் கடற்படையிலிருந்து விடைபெற்றது. விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி துணை அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மஸகான் கப்பல் கட்டும் தளத்தில் கடந்த 1989ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி கட்டப்பட்டு, கடற்படையில் சேர்க்கப்பட்ட இந்த கப்பல் தனது 32 ஆண்டு கால சேவையில் 6 லட்சத்து 44 ஆயிரத்து 897 நாட்டிகல் மைல் தூரம் பயணித்துள்ளது. இது 30 முறை உலகை சுற்றி வருவதற்கும், நிலவுக்கும் பூமிக்கும் இடையே 3 முறை சுற்றி வருவதற்கும் சமம் என பாதுகாப்பு அமைச்சகம் விடுத்த செய்திக் குறிப்பில் புகழ்ந்துள்ளது.

Tags : ISN ,Kukri , First Missile, Ship, Farewell, ISN Kukri
× RELATED நாட்டின் முதல் ஏவுகணை கப்பல் 32 ஆண்டு...