தடைகளை தாண்டி சாதனை கூகுளை பின்னுக்கு தள்ளி நம்பர்-1 ஆனது டிக்டாக்

வாஷிங்டன்: குறும் வீடியோக்கள் மூலம் திறமையை வெளிப்படுத்தும் புதிய கண்டுபிடிப்பை ‘டிக்டாக்’ மொபைல் ஆப் முதன் முதலில் கண்டுபிடித்தது. சீனாவின் ‘பைட் டான்ஸ்’ எனும் நிறுவனம் உருவாக்கிய டிக்டாக் வெகு குறுகிய காலத்தில் உலக அளவில் பிரபலமானது. ஆனாலும், சீனாவுக்கு எதிரான நடவடிக்கையாக, தேச பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் டிக்டாக் ஆப்பிற்கு தடை விதித்துள்ளன.

ஆனால் அந்த தடையையும் மீறி இன்றும் பலரும் டிக்டாக் மீது மோகம் கொண்டுள்ளனர். அதன் வெளிப்பாடாக, 2021ம் ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட வெப்சைட்களில் டிக்டாக்.காம் முதல் இடத்தை பிடித்துள்ளது. பல தகவல்களை அள்ளித் தரும் கூகுளையே 2ம் இடத்திற்கு தள்ளி உள்ளது. கடந்த 2020ல் கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட், ஆப்பிள், நெட்பிளிக்ஸ், அமேசான் ஆகிய வெப்சைட்களுக்கு அடுத்தபடியாக 7வது இடத்தில் இருந்த டிக்டாக், தற்போது அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

Related Stories: