×

வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்ப பேடிஎம் புது வசதி

மும்பை: வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவில் இருப்பவர்களுக்கு பேடிஎம் வாலட்டில் பணம் அனுப்ப புது வசதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் இந்தியாவில் உள்ளவர்களுக்குப் பணம் அனுப்ப, பேடிஎம் நிறுவனம், மணிகிராம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, வெளிநாட்டில் மணி கிராம் பயன்படுத்துபவர்கள், அதில் இருந்து, முழுமையான கேஒய்சி விவரங்களை சமர்ப்பித்துள்ள பேடிஎம் வாடிக்கையாளர்களின் வாலட்டுக்கு நேரடியாகவும், உடனடியாகவும் பணம் அனுப்பலாம்.

இதுகுறித்து மணிகிராம் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அலெக்ஸ் ஹோம்ஸ் கூறுகையில், எங்கள் மொபைல் வாலட் திறன்களை, உலகின் மிகப்பெரிய சந்தை ஒன்றில் விரிவுபடுத்த பேடிஎம் உடன் கூட்டு சேர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார். பேடிம் பேமன்ட் வங்கியின் மேலாண்மை இயக்குநரும், தலைமை செயல் அலுவலருமான சதீஷ் குமார் குப்தா கூறுகையில், பேடிஎம் வாலட்டுக்கு நேரடியாக வெளிநாட்டு பணம் அனுப்பும் வசதி, புலம் பெயர்ந்த இந்தியர்கள் பணம் அனுப்ப இணையற்ற வசதியை வழங்கும் என நம்புகிறோம், என்றார்.

Tags : BDM , Money, pay tm, new facility
× RELATED ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு கூகுள்...