×

லண்டனிலிருந்து திரும்பிய நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடிக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இந்த படத்தை சுராஜ் இயக்குகிறார். படத்தின் பாடல் கம்போசிங் பணிக்காக படக்குழுவுடன் வடிவேலு லண்டன் சென்றிருந்தார். நேற்று முன்தினம் அவர் லண்டனிலிருந்து திரும்பியபோது, காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக அவதிப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.  இதையடுத்து போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். ‘கொரோனா தொற்று காரணமாக, வடிவேலு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். அவர் நலமுடன் இருக்கிறார்’ என வடிவேலுக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.

Tags : Corona ,Vadivelu ,London , London, Actor Vadivelu, Corona, Hospital,
× RELATED கைத்தட்டலுக்கு குரங்குதான்...