எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் மரியாதை

சென்னை: எம்ஜிஆரின் 34வது நினைவு நாளையொட்டி நேற்று மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் மலர்வளையம் வைத்து அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். எம்ஜிஆரின் 34வது ஆண்டு நினைவு நாளான நேற்று காலை 10 மணிக்கு சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் அதிமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சி பகுதி, வட்ட அளவில், அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும், தங்கள் பகுதிகளில் ஆங்காங்கே எம்ஜிஆர் திருஉருவப் படங்களை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: