தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பிரசாதம் தயாரிக்க ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்: அறநிலையத்துறை அதிரடி உத்தரவு

சென்னை: இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன்  அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்களின் தரத்தினை மேம்படுத்தவும், கருவறை மற்றும் பிரகாரங்களில் தரமற்ற நெய்யினை பயன்படுத்தி விளக்கு மற்றும் தீபம் ஏற்றுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினை தவிர்க்கும் பொருட்டும் சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகிறது. கோயில்களில் விளக்கேற்றவும் மற்றும் நெய்வேத்திய பிரசாதம் தயார் செய்யவும் பயன்படுத்தப்படும் வெண்ணெய், நெய் போன்ற பொருட்களை ஆவின் நிறுவனம் மூலம் மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்திக்கொள்ள அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், கோயில்களில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பிரசாதங்களை தயார் செய்ய பயன்படுத்தப்படும் நெய் மற்றும் வெண்ணெய் போன்ற பொருட்களையும். பக்தர்களுக்கு நெய்விளக்கு ஏற்றுவதற்கு விற்பனை செய்யப்படும் நெய்யினையும் ஆவின் நிறுவனம் மூலம் மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்திக்கொள்ள அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. எனவே, இத்துறை கட்டுப்பாட்டில் அனைத்து கோயில்களிலும் கோயில் உள்துறை பயன்பாட்டிற்கும். பிரசாதம் தயாரிப்பிற்கும் தேவைப்படும் நெய் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை ஆவின் நிறுவனம் மூலம் மட்டுமே வருகிற 1.1.2022 முதல் கொள்முதல் செய்ய வேண்டும்.

Related Stories: