×

விசிகவின் 2021-ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா; முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது.! வைகோவுக்கு பெரியார் ஒளி விருது

சென்னை: விசிகவின் 2021-ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. வைகோவுக்கு பெரியார் ஒளி விருது, பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு காமராஜர் விருது, பி.வி.கரியமாலுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருது வழங்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 2021-ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை வேப்பேரியில் இருக்கக்கூடிய பெரியார் திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்பேத்கர் சுடர் விருதும்,   மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு பெரியார் விருதும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு காமராஜர் விருதும், பி.வி.கரியமாலுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருது வழங்கப்பட்டுள்ளது.

Tags : Awards Festival ,VICA ,Md. ,KKA ,Stalin ,Waigo , Vizika's Awards Ceremony for 2021; Ambedkar Flame Award for Chief Minister MK Stalin! Periyar Light Award for Vaiko
× RELATED காட்டுவாசியாக நடிக்கிறார் பீட்டர் ஹெய்ன்