திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தில் அதிமுகவினருக்கு பள்ளி மாணவர்களை போன்று அட்டனன்ஸ் எடுத்த நிர்வாகி..!!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர் நினைவு நாளில் வார்டு வாரியாக பள்ளி மாணவர்களை போன்று அதிமுக நிர்வாகி எடுத்த அட்டனன்சுக்கு நிர்வாகிகள் கைகளை உயர்த்தி தங்கள் வருகையை பதிவு செய்த வினோதம் நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 34வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாலை அணிவிக்க வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தொண்டர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் வருகை தந்தனர். அப்போது தொண்டர்கள் மற்றும் வார்டு வாரியான நிர்வாகிகளின் வருகையை பதிவு செய்ய ஒலிபெருக்கி மூலம் அட்டனன்ஸ் எடுக்கப்பட்டது. அங்கிருந்தவர்கள் தங்களது கைகளை உயர்த்தி வருகையை பதிவு செய்தனர். பள்ளிகளுக்கு மட்டுமே அட்டனன்ஸ் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதிமுக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியிலும் தொண்டர்களை மாணவர்களாக நினைத்து அட்டனன்ஸ் எடுத்தது அங்கிருந்தவர்கள் இடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Related Stories: