×

மலையாள இயக்குனர் சேதுமாதவன் மரணம்

சென்னை: பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார். அவருக்கு 90 வயது. சென்னை கோடம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வயதுமுதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால்  சேதுமாதவன் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை காலமானார்.அவருக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இவர் 1950களில் எல்.வி.பிரசாத், ஏ.எஸ்.ஏ.சுவாமி, சுந்தர் ராவ் நட்கர்னி, டி.ஆர்.சுந்தரம் ஆகிய இயக்குநர்களுடனும் பணியாற்றியுள்ளார்.

1961ல் வீரவிஜயம் என்ற சிங்களத் திரைப்படத்தின் மூலம் இயக்குநரானார். அசோசியேட் பிக்சர்ஸ் மூலம், டி.இ. வாசுதேவன் இயக்கிய ஞானசுந்தரி (1961) அவரது முதல் மலையாளப் படம். மலையாளத்தில் கமல்ஹாசனை முதலில் சிறுவனாக கண்ணும் காரலும் படத்தில் அறிமுகப்படுத்தினார். பிறகு வாலிப வயது கமலையும் ஹீரோவாக மலையாளத்தில் அறிமுகம் செய்து வைத்தார். பத்து தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் சிறந்த இயக்கத்திற்கான நான்கு விருதுகள் உட்பட ஒன்பது கேரள மாநில திரைப்பட விருதுகள் பெற்றுள்ளார்.

மலையாளத்தில் 60 படங்களை இயக்கினார். சிவக்குமார் மற்றும் ராதா நடிப்பில் அவர் நடித்த ‘மறுபக்கம்’ என்ற தமிழ் திரைப்படம் 1991 இல் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.அவரது மறைவுக்கு கமல்ஹாசன் உள்பட திரையுலகினர் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Tags : Sethumadhavan , Malayalam director Sethumadhavan dies
× RELATED மலையாள இயக்குனர் சேதுமாதவன் மரணம்