தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லும் திறமை எங்களிடம் உள்ளது: புஜாரா நம்பிக்கை

செஞ்சூரியன்: தென்ஆப்ரிக்கா-இந்தியா இடையே 3 டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் போட்டி நாளை மறுநாள் செஞ்சூரியனில் தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சிக்கிடையே இந்திய வீரர்  புஜாரா அளித்துள்ள பேட்டி: தென்ஆப்பிரிக்க ஆடுகளங்களில் வேகமும், பவுன்சும் இருக்கும், பந்து நன்கு திரும்பும் என்பது தெரியும். எனவே வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆனால் வேகப்பந்து வீச்சு தாக்குதலை எங்களால் திறம்பட சமாளிக்க முடியும்.

நன்றாக பயிற்சி மேற்கொண்டுள்ளதால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறேன். அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு இங்கு ஆடிய அனுபவம் உள்ளது. அது உதவியாக இருக்கும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட்டில் சிறப்பாக ஆடினோம். தென்ஆப்பிரிக்காவிலும் டெஸ்ட் தொடரை வெல்லும் திறமை எங்களிடம் இருக்கிறது என்ற நம்பிக்கை உள்ளது, என்றார்.

Related Stories: