×

புரோ கபடி லீக் தொடர்; வெற்றி கணக்கை தொடங்குமா தமிழ் தலைவாஸ்?.. இன்று பெங்களூரு புல்சுடன் மோதல்

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. 2வது நாளான நேற்று நடந்த 4வது லீக் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் 34-27 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தியது. தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி 41-30 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை தோற்கடித்தது. டெல்லியின் நட்சத்திர ரெய்டரான நவீன்குமார் 16 புள்ளிகள் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். தொடர்ந்து நடந்த 6வது லீக் போட்டியில் பாட்னா பைரட்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், முதல் பாதியில் அரியானா 22-18 என முன்னிலையில் இருந்தது.

ஆனால் 2வது பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாட்னா 42-39 என்ற புள்ளி கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. பாட்னா அணியின் மோனு கோயாட் ரெய்ட்டில் 14, டேக்கில் ஒரு புள்ளி எடுத்து வெற்றிக்கு உதவினார். இன்று இரவு 7.30 மணிக்கு யு மும்பா-தபாங் டெல்லி, 8.30 மணிக்கு தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ், 9.30 மணிக்கு பெங்கால் வாரியர்ஸ்- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்சிடம் டிரா கண்ட தமிழ்தலைவாஸ் இன்று வெற்றிகணக்கை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags : Pro Kabaddi League Series ,Tamil Talawas ,Bangalore Bulls , Pro Kabaddi League Series; Will Tamil Talawas start the winning streak? .. clash with Bangalore Bulls today
× RELATED புரோ கபடி லீக் தொடர் பைனலில் புனேரி பல்தான்