×

நகைசுவை நடிகர் வடிவேலுக்கு கொரோனா: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை 34 பேருக்கு  ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இதற்காக இரவு நேர ஊரடங்கும் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் வடிவேலுக்கு கொரோனா உறுதியானது. நாய் சேகர் படத்தின் இசையமைப்பு காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக படக்குழுவினருடன் லண்டனில் இருந்த அவர், கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார்.

அப்பொழுது பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு  கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எந்த வகையான கொரோனா என்பது குறித்து விரைவில் பரிசோதனை முடிவுகளில் அறிவிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வடிவேலுவுடன் இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் சுராஜ்,அப்படத்தின் குழுவினர் என அனைவரும் லண்டனிலிருந்து திரும்பிய நிலையில்  அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Korona ,Shahwel ,Chennai , Vadivelu, Corona, Chennai, Private Hospital, Permission
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...