நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள் : இயக்குனர் கே. எஸ். சேதுமாதவன் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்!!

சென்னை : திரைப்பட இயக்குனர் கே. எஸ். சேதுமாதவன் வயது முதிர்வு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90.மலையாள இயக்குனரான இவர், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிறமொழி படங்களையும் இயக்கியுள்ளார். நடிகர் கமல்ஹாசனை மலையாள திரைப்பட உலகில் அறிமுகப்படுத்திவர் இயக்குனர் கே. எஸ். சேதுமாதவன். நாளை நமதே உள்ளிட்ட 75 படங்களை இயக்கியுள்ளார்.சிறந்த திரைப்படங்களை இயக்கியதற்காக தேசிய விருது, பிலிம் பேர் விருது, நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.கே. எஸ். சேதுமாதவன் அவர்களின் உடல் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் கே. எஸ். சேதுமாதவன் அவர்களின் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள், எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: