×

கொரோனா பரவல் காரணமாக H1B உள்ளிட்ட விசாக்களுக்கு நேர்காணல் இல்லை: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: கொரோனா பரவல் காரணமாக சில விசாக்களை நேர்காணல் இல்லாமல் தரும் வகையில் அமெரிக்க அரசு விதிகளில் தளர்வு அளித்துள்ளது. மூன்றாவது ஆண்டாக கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் விசா வழங்குவது தொடர்பாக தூதரகங்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி தனித்திறன் ஊழியர்களுக்கு வழங்கப்படும் H1B விசா, கல்வி தொடர்பாக வழங்கப்படும் H3 விசா நிறுவனங்களுக்கிடையே பணி மாறுவோருக்கு வழங்கப்படும் O விசா ஆகியவற்றுக்கு நேர்காணல் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல்கள் இல்லாமல் 2022 டிசம்பர் வரை இத்தகைய விசாக்களுக்காக தூதரக அதிகாரிகள் அனுமதி அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹெச்-1பி உள்ளிட்ட விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் நடைமுறைக்கு வரவேண்டிய அவசியமில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஓமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதாலும், நேரடி சந்திப்பை அதிகாரிகள் எதிர்கொள்வதை தவிர்ப்பதற்காகவும், தற்போது உலகளாவிய பயணம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் விசாக்கள் வழங்கப்படுவதற்கான காலத்தை வெகுவாக குறைப்பதற்காகவும் தற்காலிகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : US , visa
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!