×

கொரோனா பரவல் எதிரொலி!: மஹாராஷ்டிராவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு..!!

மும்பை: கொரோனா பரவல் அதிகரிப்பால் மஹாராஷ்டிராவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் தொற்று  தற்போது மீண்டும் பல நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், சண்டிகர், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா என பல்வேறு மாநிலங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

தற்போது 236 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பதிவாகியுள்ள நிலையில், மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக மஹாராஷ்டிராவில் ஒரேநாளில் புதிதாக 23 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்களில் இதுவரை 42 பேர் குணமாகியுள்ளனர். இதற்கிடையே மஹாராஷ்டிராவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது.

இதன்படி கிறிஸ்துமஸ், புத்தாண்டை வழிபாட்டு தலங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் எளிமையாக கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது. கிறிஸ்துவ ஆலயங்களில் நடைபெறும் பிரார்த்தனைகளில் 50 சதவீதம் பேர் மட்டும் பங்குபெற வேண்டும். ஆலைகளுக்கு வெளியில் கடைகள் போடக்கூடாது. அதிக மக்கள் கூடும் வகையில் பேரணி, ஊர்வலங்கள், வானவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது.


Tags : Christmas ,New Year ,Maharashtra , Corona, Maharashtra, Christmas, New Year
× RELATED பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!