×

பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவு

திருச்சி: பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நம்வாழ்வார் மோட்சத்துடன் இன்று நிறைவு பெற்றது. வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டமாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா ஆண்டுதோறும் 21 நாட்கள் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 4ஆம் தேதி பகல் 10 விழாவுடன் தொடங்கியது.

முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு கடந்த 14ஆம் தேதி நடைபெற்றது. இதை தொடர்ந்து நடந்த இரா பத்து உற்சவத்தில் நம்பெருமாளின் கைகள சேவை, வேடுபறி சேவைகள் நடைபெற்றன. இரா பத்து நிகழ்ச்சியின் நிறைவாக தீர்த்தவாரியும் நம்வாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் வைபவமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நம்வாழ்வாருக்கு நம்பெருமாள் மோட்சம் அளித்ததை தரிசித்தனர்.

Tags : Srirangam Ranganadar Temple ,Vaikunda Ekadasi Piruva , srirangam
× RELATED ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஜூலை...