×

அரக்கோணம் - காட்பாடி மார்க்கத்தில் ரயில்வே மேம்பாலத்தில் விரிசல்: 23 ரயில்கள் ரத்து...தவித்து போன பயணிகள்..!!

ராணிப்பேட்டை: அரக்கோணம் - காட்பாடி இடையே மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை 3 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் திருவலம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை வழியே செல்லக்கூடிய ஏலகிரி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டது. மேலும் அரக்கோணம் - ஜோலார்பேட்டை, அரக்கோணம் காட்பாடி மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்து ஒரே நேரத்தில் அரக்கோணம் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

பணி முடிந்து வீடு திரும்பிய ஏராளமானோர் பேருந்துகளை பிடிக்க முண்டியடித்ததால் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிலர் பேருந்து படிக்கெட்டில் ஆபத்தான முறையில் செல்வத்தையும் காண முடிந்தது. அரக்கோணம் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் பேருந்துக்காக காத்திருப்பதாக போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து திருத்தணி மற்றும் சோளிங்கர் பேருந்து பனிமனைகளில் இருந்து 25க்கும் மேற்பட்ட பேருந்துகள் வரவழைக்கப்பட்டன. அதன் பின்னரே போக்குவரத்து சீரடைந்தது. மேம்பால சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Tags : Arakkonam ,Katpadi , Hexagon - Katpadi, Railway Overpass, Cracks
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...