×

ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வருவதால் தேர்தல்களை தள்ளி வையுங்கள் : பிரதமர் மோடி, தேர்தல் ஆணையத்திற்கு அலகாபாத் ஐகோர்ட் வேண்டுகோள்

அலகாபாத் : கொரோனா 2ம் அலை வராமல் தடுக்க தேர்தல் பரப்புரைகளை ரத்து செய்வதுடன் தேர்தல்களை ஓரிரு மாதங்கள் தள்ளி வைக்குமாறும் தேர்தல் ஆணையத்தை அலகாபாத் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓமிக்ரான் பரவலுக்கு இடையே வழக்கறிஞர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நடத்தும் பொது கூட்டங்கள், பிராணிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்றும் அலகாபாத் நீதிமன்றம் அறிவுறுத்தியது. நாட்டு மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி வழங்குவதில் முனைப்பு காட்டி வரும் பிரதமர் மோடியை பாராட்டிய நீதிபதிகள், தேர்தல் பரப்புரை கூட்டங்களை அவர் ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும் தேர்தல்களை ஓரிரு மாதங்கள் தள்ளி வைக்க அறிவுறுத்திய நீதிபதிகள், பரப்புரைகளை ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.


Tags : Modi ,Alagabad Ecourt ,Election Commission , அலகாபாத் நீதிமன்றம்
× RELATED ரெய்டு நடத்தி எனது பிரசாரத்தை...