×

பசு நமக்கு தாய்: பிரதமர் பேச்சு

வாரணாசி: ‘பசு நமக்கு தாய். புனிதமானது. இதை பாவம் என்று கருதுபவர்கள், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கால்நடைகளை நம்பியிருப்பதை உணராதவர்கள்,’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். உத்தரபிரதேச மாநில சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ அரசு பல்வேறு நலத்திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வருகிறது. பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் சமீபத்தில் காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் பல கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டு, மோடி அதை திறந்து வைத்தார்.  

இந்நிலையில், ரூ.2,095 கோடி மதிப்பில் 27 திட்டங்களை தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி நேற்று வாரணாசி சென்றார். அங்கு, இத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘பசுக்களை, எருமைகளை கேலி செய்பவர்கள், பாவம் என்று கருதுபவர்கள் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கால்நடைகளை நம்பியுள்ளது என்பதை மறந்து விடுகின்றனர். பசு நமக்கு தாயை போன்றது.  மிகவும் புனிதமானது. சிலரின் கொள்கைகள் ‘மாபியா வாதம், குடும்ப வாதமாக’ உள்ளது (சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை குறிப்பிட்டு இவ்வாறு கூறினார்) ஆனால், நாங்கள் ‘எல்ேலாருடைய ஆதரவு, எல்லோருடைய வளர்ச்சி’ என்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறோம்,’’ என்றார்.



Tags : Cow, mother, Prime Minister
× RELATED கூடுதல் வாக்கு செய்தி முற்றிலும்...