×

சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் லாரா

ஐதராபாத்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின்  பேட்டிங் பயிற்சியாளராக  வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் டி20 போட்டியின் 15வது தொடருக்கான  மெகா ஏலம்  விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு வசதியாக அணிகள்  பயிற்சியாளர், ஆலோசகர்கள்  நியமிக்கும் பணியில் மும்முரமாக உள்ளன. இந்நிலையில்  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த  டிரெவோர் பேலிசுக்கு(ஆஸ்திரேலியா)  பதில்  டாம் மூடி(ஆஸி)  தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

பெங்களூர்(ஆர்சிபி) அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த சைமன் கட்டிச்(ஆஸி) இப்போது சன்ரைசர்ஸ் அணியின்  உதவி  பயிற்சியாளராகவும், தமிழகத்தைச் சேர்ந்த ஹேமங் பதானி  பீல்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முத்தையா முரளிதரன்   சுழற்பந்து பயிற்சியாளராக தொடர்கிறார். கூடவே  தென் ஆப்ரிக்கா வீரர் டேல் ஸ்டெயின் வேகப்பந்து பயிற்சியாளராக இருப்பார். ஆகஸ்ட்டில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற  ஸ்டெயின்  முதல்முறையாக பயிற்சியாளராகி உள்ளார்.

அதேபோல் இன்னொரு ஆச்சர்யமாக வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திரம் பிரைன் லாரா   பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார். லாரா பயிற்சியாளராக பொறுப்பேற்று மீண்டும் கிரிக்கெட் உலகிற்கு திரும்புவது  இந்திய ரசிகர்களிடையே  புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.   டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக ரன் விளாசிய வீரர்களின் பட்டியலில் முதல்  இடத்திலும்(400ரன்), 3வது இடத்திலும்(375ரன்) லாராதான் இருக்கிறார்.

Tags : Sunrisers ,Laura , Sunrisers team, coach, Laura
× RELATED ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை...