சிரஞ்சீவியுடன் நடிக்கிறார் சல்மான் கான்

ஐதராபாத்: சிரஞ்சீவியுடன் தெலுங்கு படத்தில் நடிக்கிறார் பாலிவுட் நடிகர் சல்மான் கான்.  மலையாளத்தில் வெளியான லூசிபர் படம் தெலுங்கில் காட்பாதர் பெயரில் உருவாகிறது. இந்த படத்தில் மோகன்லால் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். தமிழ் பட இயக்குனரான ஜெயம் ராஜா இந்த படத்தை இயக்குகிறார். லூசிபர் படத்தை இயக்கிய நடிகர் பிருத்விராஜ், அதில் கவுரவ வேடத்திலும் நடித்திருந்தார். அந்த வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என பேச்சு எழுந்தது. அப்போது சல்மான் கான் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த படம் குறித்து அறிந்த சல்மான் கான், இதில் நடிக்கவும் ஆர்வம் காட்டினார். இதையடுத்து பிருத்வி ராஜ் வேடத்தில் நடிக்க சல்மான் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: