கிறிஸ்துமஸ் எதிரொலி உச்சத்தை தொட்ட விமான கட்டணம்

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. ஒரு சில சீட்கள் மட்டுமே உள்ளன. இதையடுத்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் இந்த விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு திடீரென அதிகரித்துள்ளது. சென்னையிலிருந்து தூத்தூக்குடிக்கு வழக்கமான டிக்கெட் கட்டணம் ரூ.3,500. ஆனால் நேற்று 10,500ம், கிறிஸ்துமஸ்க்கு முந்தின நாள் 24ம் தேதி பயணிக்க ரூ.12 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. அதைப்போல் மதுரைக்கு வழக்கமான கட்டிணம் ரூ.3,500. ஆனால் அது ரூ.9,800 வரை அதிகரித்துள்ளது.

Related Stories: