சென்னை வந்தார் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு

சென்னை: இந்தியயாவின் துணை ஜனாதிபதி வெங்கயநாயுடு தமிழகத்திற்கு 8 நாட்கள் பயணமாக டில்லியிலிருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் நேற்று மாலை சென்னை பழைய விமானநிலையம் வந்தார். அவரை சென்னை விமானநிலையத்தில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, முப்படை உயரகாரிகள் வரவேற்றனர். அதன்பின்பு வெங்கயநாயுடு காரில் கிண்டி ராஜ்பவன் புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் 8 நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு வரும் 31ம் தேதி வெள்ளிக்கிழமை காலை சென்னையிலிருந்து தனி விமானத்தில் கேரளா மாநிலம் கொச்சி புறப்பட்டு செல்கிறாா்.

Related Stories: