அதிமுகவுடனான உறவு தொடரும்: பாஜ தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றிகரமாக முன்னிறுத்திக் கொண்டிருக்கும் அதிமுக, தற்போது மிகவும் பலமாகவும், உறுதியாகவும் இருக்கிறது. இந்த உறவும் உறுதியும் இனிமேலும் இப்படியே தொடர்வதையே பாஜ விரும்புகிறது. அதிமுகவில் யாரை இணைத்துக் கொள்ள வேண்டும், யாரையெல்லாம் இணைத்துக் கொள்ளக்கூடாது என்ற முடிவுகளை எடுக்க அந்தக் கட்சியிலேயே தகுதி வாய்ந்த சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த முடிவுகளை எடுக்க முழு அதிகாரமும், தகுதியும் இருக்கிறது. பொதுவாகவே இந்தியா முழுவதும் பல கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படும் பாஜக எந்த கட்சியின் உள்கட்சி விவகாரத்தில், உள்கட்சி ஜனநாயகத்தில் தலையிடுவதில்லை. அதிமுக உறுதியாக இருக்க வேண்டும் என்று நான் சொன்ன கருத்திற்கு கண், காது, மூக்கு ஜோடித்து ஊடகச் சித்திரம் வரையப்பட்டுள்ளது. நாங்களும் அதிமுகவும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த நல்லெண்ணத்துடன் மரியாதையுடனும் இருக்கிறோம்.

Related Stories: