எம்.ஜி.ஆர். நினைவு நாளை அவரவர் ஊர்களில் நினைவஞ்சலி செலுத்த டி.டி.வி. தினகரன் வேண்டுகோள்

சென்னை: கொரோனா பரவல் அதிகரிப்பால் எம்.ஜி.ஆர். நினைவு நாளை அவரவர் ஊர்களில் நினைவஞ்சலி செலுத்த டி.டி.வி. தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பரவலால் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்.க்கு நினைவஞ்சலி செலுத்தப்பட உள்ளது. நினைவஞ்சலியில் பங்கேற்க புறப்பட இருந்த கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் சென்னை வர வேண்டாம் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

Related Stories: