நீலகிரி மாவட்டத்தில் உறைபனி.! 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி 2 மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். பின், அக்டோபர் மாதம் துவங்கி 2 மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இது நீலகிரி மாவட்டத்தின் வாடிக்கையான காலநிலை.  இந்நிலையில், மிகவும் தாமதமாக இந்த முறை கடந்த 2 நாட்களுக்கு முன் உறைபனி விழுந்தது. பொதுவாக துவக்கத்தில் ஓரிரு நாட்கள் விழும். பின், ஜனவரி மாதங்களிலேயே பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். ஆனால், இம்முறை கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக நீலகிரியில் உறைபனியின் தாக்கம் காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் உறைபனி கொட்டியது.

குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தாழ்வான பகுதிகள், நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பெரும்பாலான புல்வெளிகள் வெள்ளை கம்பளம் விரித்தார்போல் காட்சியளித்தது. இதனால், அதிகாலை நேரங்களில் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 16 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்கியசாக பதிவாகியிருந்தது. நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் 1 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவாகியிருந்தது.

Related Stories: