புதிதாக இணைப்பு தெங்கம்புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட தெங்கம்புதூர் பேரூராட்சியில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு ேமற்கொண்டனர். நாகர்கோவில் மாநகராட்சி எல்லை விரிவுபடுத்தப்பட்டு அருகில் உள்ள சில பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக தெங்கம்புதூர் மற்றும் ஆளூர் பேரூராட்சிகளை, நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் தெங்கம்புதூர் மற்றும் ஆளூர் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் அலுவலக நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாநகர் நல அலுவலர் விஜயச்சந்திரன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் மாதவன்பிள்ளை, சத்தியராஜ், சுகாதாரத்துறை இளநிலை உதவியாளர்கள், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை, தெங்கம்புதூர் பேரூராட்சி அலுவலகம் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பேரூராட்சியில் உள்ள பொருட்களின் இருப்பு நிலவரம்  மற்றும் பணியாளர்கள் குறித்த விபரங்களை கணக்கெடுத்தனர். இதுகுறித்து மாநகர் நல அலுவலர் விஜயச்சந்திரன் கூறுகையில், ‘நாகர்கோவில் மாநகராட்சியுடன் தெங்கம்புதூர் பேரூராட்சி இணைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது நாகர்கோவில் மாநகராட்சி பணியாளர்களை கொண்டு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 மேலும் ேபரூராட்சியில் உள்ள பொருட்கள் கணக்கெடுக்கப்பட்டு, மாநகராட்சியில் துறைகள் வாரியாக பிரித்து வழங்கப்படும். அதுபோல் மாநகராட்சியில் செய்யப்படும் அனைத்து நடவடிக்கைகளும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த ேபரூராட்சி பகுதியிலும் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து ஆளூர் ேபரூராட்சியிலும் இதுபோல ஆய்வுகள் ேமற்ெகாள்ளப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: