பந்தலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு மூன்று வேளை உணவு வழங்கும் திட்டம் துவக்கம்

பந்தலூர் : பந்தலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு மூன்று வேளை உணவு வழங்கும் திட்டம் நேற்று முதல் துவக்கப்பட்டது. பந்தலூர் அரசு மருத்துவமனை கடந்த 1999ம் ஆண்டு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. நாள்தோறும் சுற்றுவட்டார பகுயியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பல்வேறு நோய்களுக்கு சிகிச்கை பெற மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். 35க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தற்போது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை உள்நோயாளிகளுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் இல்லாம் இருந்து வந்த நிலையில் தற்போது ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பழுதடைந்து இருந்த மருத்துவமனை  கட்டிடங்களை புதுப்பிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.இந்நிலையில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளுக்கு 3 வேளையும் உணவு வழங்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.

அதன்படி நேற்று உள்நோயாளிகளுக்கு மூன்று வேலை உணவு வழங்கும் திட்டத்தை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் பழனிச்சாமி கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், ‘‘இந்த மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி 25 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை சமையல் அறை மற்றும் உணவு வழங்காமல் இருந்து வந்தது. இன்று (22ம் தேதி) முதல் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கப்டுகிறது.

தினமும் 3 வேலை உணவுடன் முட்டை, பழம், சுண்டல் ஆகியவை இருக்கும். வரும் காலங்களில் உள்நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் 8 மருத்துவர்கள் தேவை தற்போது 3 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். அரசு போதிய மருத்துவர்கள் மற்றும் இதர வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

உள்நோயாளிகளுக்கு 3 வேலை உணவு வழங்குவதற்கு முயற்சி எடுத்த முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி, உத்தரவு பிறபித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் சுப்ரமணியம், நீலகிரி எம்பி ராசா, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.நிகழ்ச்சியில் டாக்டர்கள் சுஜி கீர்த்திகா, சுப்ரமணியம், முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி, நெல்லியாளம் நகர செயலாளர் காசிலிங்கம், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் சேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: