×

மதுரையில் அதிகாலை பரிதாபம் 113 ஆண்டு பழமை கட்டிடம் இடிந்து விழுந்து ஏட்டு பலி-டிஜிபி சைலேந்திரபாபு அஞ்சலி

மதுரை : மதுரையில் 113 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து ஏட்டு உயிரிழந்தார். இவரது உடலுக்கு டிஜிபி சைலேந்திர பாபு நேற்று அஞ்சலி செலுத்தினார்.மதுரை கீழவெளி வீதியை சேர்ந்தவர் முகமது இத்ரிஸ் (55). இவருக்கு சொந்தமாக நெல்பேட்டை மெயின் ரோட்டில் 113 ஆண்டு பழமையான மாடிக்கட்டிடம் உள்ளது. அதன் தரைத்தளத்தை பூச்சி மருந்து, உரக்கடை, மற்றும் பலசரக்கு கடைகளுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு விளக்குத்தூண் காவல் நிலையத்தை சேர்ந்த ஏட்டுகள் சரவணன் (44), கண்ணன் (49) ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில் இருவரும் முகமது இத்ரிஸின் கட்டிடத்திற்கு அருகே நின்றிருந்தனர்.

 திடீரென கட்டிட முதல் மாடியின் ஒருபுற சுவர் இடிந்து இருவர் மீதும் விழுந்தது. இடிபாடுகளில் 2 பேரும் சிக்கிக் கொண்டனர். அப்பகுதியில் லாரிகளில் சரக்கு ஏற்றிக் கொண்டிருந்த லோடுமேன்கள் ஓடிவந்து இருவரையும் மீட்க முயன்றனர். தகவலறிந்து தீயணைப்பு படை மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் வந்து இடிபாடுகளை அகற்றி, இருவரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஏட்டு சரவணன் உயிரிழந்தார். மற்றொரு ஏட்டு கண்ணனுக்கு, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 இது குறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏட்டு சரவணன், மதுரை அருகே சோழவந்தானை சேர்ந்தவர். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி, காயத்ரிதேவி, சுகுணாதேவி என 2 மகள்கள் உள்ளனர்.தகவலறிந்து மதுரை வந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, கிரைம் பிராஞ்ச் பகுதியிலுள்ள காவலர் குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த ஏட்டு சரவணனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அமைச்சர் பி.மூர்த்தி, தென்மண்டல ஐஜி அன்பு, போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், எம்எல்ஏக்கள் பூமிநாதன், வெங்கடேசன் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.கட்டிட உரிமையாளர்  உட்பட 4 பேர் கைது: இந்த விபத்து தொடர்பாக கட்டிட  உரிமையாளர் முகமது இத்ரீஸ், வாடகை வசூலிப்பாளர் அப்துல் ரசாக் மற்றும் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியும் அங்கு நடத்திவந்த கடையை காலி செய்யாத நாகசங்கர் (58), சுப்பிரமணியன் (57) ஆகிய 4 பேர் மீதும் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Tags : Bali ,DGB ,Zylendra Babu ,Madurai , Madurai: An 113-year-old building collapsed in Madurai, killing eight people. DGP Silenthra Babu paid homage to his body yesterday
× RELATED சாலையில் மயங்கி கிடந்தவர் பலி