×

கொரோனா தொற்று பாதிப்பை குறைக்கும் பைசர் நிறுவனத்தின் மாத்திரைக்கு அமெரிக்க சுகாதாரத்துறை ஒப்புதல்

வாஷிங்டன் : கொரோனா ஓரளவுக்கு தடுப்பூசி மூலம் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அதன் உருமாறிய வைரசான ஒமிக்ரான் உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், பைசர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்காக  ‘பேக்ஸ்லோவிட்’ என்னும் மாத்திரையை அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த மாத்திரையானது லேசானது முதல் மிதமானது வரையிலான கொரோனா பாதிப்புக்கு நிவாரணம் அளிக்கும்.

இந்த மாத்திரையின் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்துக்கு எப்.டி.ஏ. என்னும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் பைசர் நிறுவனம் கடந்த மாதம் விண்ணப்பித்து இருந்தது. இந்த மாத்திரைக்கு நல்லதொரு செயல்திறன் இருப்பது பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் பைசர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தற்போது அனுமதி அளித்துள்ளது.முதல்கட்டமாக 1 கோடி கொரோனா மாத்திரை வாங்க ஆர்டர் கொடுத்துள்ள அமெரிக்கா அரசு, பொதுமக்கள் இந்த மாத்திரையை வீட்டில் வைத்து பயன்படுத்தி கொள்ளவும் அனுமதி வழங்கி இருக்கிறது.

பாக்ஸ்லோவிட் மாத்திரையை எடுத்துக் கொண்டால் ஓமிக்ரான்  உள்ளிட்ட மோசமான அனைத்து வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும் என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த மாத்திரையை 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்வபவர்களின் எடை குறைந்தது 40 கிலோ இருக்க வேண்டும்.கொரோனா அறிகுறிகள் தென்பட்ட மூன்று நாட்களில் இந்த மாத்திரை வழங்கப்பட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் விகிதம் 89 சதவீதம் குறையும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Tags : U.S. Department of Health ,Pfizer , ஒமிக்ரான்
× RELATED கொரோனா தடுப்பூசிக்கு கடும்...