மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் ஒற்றை காட்டு மாடு உலா

மஞ்சூர் :  மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் ஒற்றை காட்டு மாடு ஒன்று நடமாடி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மெரிலேண்டு பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் கடந்த சில தினங்களாக காட்டு மாடு ஒன்று நடமாடி வருகிறது. இதனால் தோட்டங்களில் இலை பறிக்கும் தொழிலாளர்களை கண்டால் விரட்டுவதாக கூறுகின்றனர். தேயிலை தோட்டங்களுக்கு இலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

இதேபோல் மஞ்சூர் பகுதியிலும் காட்டு மாடு ஒன்று பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது. எனவே தொழிலாளர்களை அச்சுறுத்தும் காட்டு மாடை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: