×

நாகையில் காணாமல் போன 2000 ஆண்டுகள் பழமையான 2 பஞ்சலோக கோயில் சிலைகள் 29 ஆண்டுகளுக்கு பின்பு மீட்பு..!!

நாகை: நாகப்பட்டினத்தில் காணாமல் போன கோயில் சிலைகள் 29 ஆண்டுகளுக்கு பின்பு மீட்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினம் மாவட்டம் சன்னாசி பனங்குடி கிராமத்தில் தாளரனேஸ்வரர் கோயிலில் இருந்து 1992ம் ஆண்டு ஆடிப்புர அம்மன் சிலை மற்றும் விநாயகர் சிலை ஆகியவை காணாமல் போனது. இந்த வழக்கு 1993ம் ஆண்டு கண்டுபுடிக்க முடியாத வழக்காக முடிக்கப்பட்டது. இந்நிலையில் 2017ம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து சிலை திருட்டு வழக்குகளும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஆனால் சன்னாசி பனங்குடி கிராமத்தில் காணாமல் போன சிலைகள் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதால் அந்த கோயில் பூசாரியிடம் புகார் பெறப்பட்டது.

மீண்டும் கடந்த நவம்பர் மாதம் சிலை மாயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 2000 ஆண்டுகள் பழமையான பஞ்சலோகத்தால் ஆன அந்த 2 சிலைகளும் தற்போது மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சிலைகள் நாளை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த சிலைகளை மீட்கும் முயற்சியில் சிறப்பாக செயல்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளை டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டினார்.


Tags : PANJALOKA ,Naga , Naga, temple idols
× RELATED கலவரம் நடந்த மணிப்பூரில் பாஜ படுதோல்வி