×

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாதி சான்றிதழ் கேட்டு பழங்குடியினர் போராட்டம்

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு நூற்றுக்கணக்கானோர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மலைக்குறவர் இன மக்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த பழங்குடியின சாதி சான்றிதழ் அண்மை காலமாக வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்தும் ஒன்றிய, மாநில அரசுகளின் சலுகைகளை வழங்க கோரியும் சேலம் மாவட்ட மலை குறவர் சங்கத்தினர் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் உட்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து வைத்தனர். 4 வாரங்களுக்குள் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளை ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து 6 மணி நேரம் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. 4 வாரங்களுக்குள் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்துடன் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags : Attur ,Salem district , Struggle
× RELATED சேலம் ஆத்தூரில் அமைச்சர் உதயநிதி...