×

ஓமிக்ரான் ஆபத்து.. தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கா?... கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று ஆலோசனை


சென்னை : ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா ஓரளவுக்கு தடுப்பூசி மூலம் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அதன் உருமாறிய வைரசான ஒமிக்ரான் உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தி வருகிறது. இதில் ஒமிக்ரான் வகை தொற்று வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகள் மூலம் இந்தியாவிலும் பரவத் தொடங்கி விட்டது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இதுவரை இந்தியாவில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை 1 பேருக்கு மட்டும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஓமிக்ரான் பரவலுக்கு எச்சரிக்கை தரும் விதமாக ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தது. அதில், கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கட்டுப்பாடுகள் கொண்டு வர விருப்பம் இருந்தால் கொண்டு வரலாம். தேவைப்படும் பட்சத்தில் இரவு நேர லாக்டவுன் கொண்டு வர வேண்டும். கட்டுப்பாட்டை அதிகரிக்க வேண்டும். கூட்டங்களை கண்காணிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று 12.30 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.அதில், ஒமிக்ரானை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேரங்களில் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? ஆகியவை குறித்தும் விவாதிக்க உள்ளதாக தெரிகிறது.

Tags : Omicron ,Tamil Nadu ,Chief Secretary ,Lord , ஓமிக்ரான்
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...