தடையை மீறி ஆர்ப்பாட்டம் எச்.ராஜா கைது

தொண்டாமுத்தூர்: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 17ம் தேதி சுபவீரபாண்டியன் தலைமையில் ‘பெண் அடிமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதற்கு ஏற்பாடு செய்த பாரதியார் பல்கலைக்கழகத்தை கண்டித்தும், கேரளாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த நேற்று காலை பாஜவின் திரண்டனர். இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட 100க்கும் மேற்பட்ட பாஜவினரை வடவள்ளி போலீசார் கைது செய்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

Related Stories: