ஊட்டி-மேட்டுபாளையம் இடையே 60 நாட்களுக்கு பின் மீண்டும் மலை ரயில் சேவை துவங்கியது

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த கனமழை காரணமாக ஹில்குரோவ் மற்றும் ஆடர்லி உள்ளிட்ட பகுதிகளில் ராட்சத பாறைகள் தண்டவாளத்தில் விழுந்து ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக மேலும் பல  இடங்களிலும் பாறைகள் விழுந்ததால், மேட்டுப்பாளையம்-ஊட்டி  இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது பாறைகள் அகற்றப்பட்டு  சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் 60 நாட்களுக்கு பின் நேற்று முதல் மேட்டுப்பாளையம் - ஊட்டி வரையிலான மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது. 5 பெட்டிகளுடன் மதியம் 12.05க்கு ஊட்டி ரயில் நிலையத்திற்கு வந்தது. இதில் 180 பயணிகள் பயணித்தனர். 60 நாட்களுக்கு பின் மலை ரயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: