கேரளாவில் காங். செயல் தலைவர் தாமஸ் மரணம்

திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் பி.டி.தாமஸ் (71). அக்கட்சியின் மாநில செயல் தலைவரான இவர், கடந்த தேர்தலில் எர்ணாகுளம் மாவட்டம் திருக்காக்கரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், புற்றுநோயால் அவதிப்பட்ட அவர், கடந்த மாதம் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்ற வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மறைவுக்கு கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், கேரள முதல்வர் பினராய் விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்கட்சி தலைவர் சதீசன், ரமேஷ் சென்னித்தலா உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தாமசின் இறுதி சடங்கு இன்று நடக்கிறது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ளார். இவருடைய கடைசி விருப்பப்படி, கொச்சி ரவிபுரத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

Related Stories: