22வது மாடியில் இருந்து குதித்து ஜப்பான் நடிகை தற்கொலை

டோக்கியோ: ஜப்பான் நாட்டை சேர்ந்த பிரபல நடிகர் மசாகி கண்டா, பாடகி சீகோ மட்சுடாவின் மகளும், நடிகையும், பாடகியுமான சயாகா கண்டா (35), கடந்த சில நாட்களுக்கு முன்பு சப்போரோவில் உள்ள ஒரு ஓட்டலில் இறந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். போலீஸ் விசாரணையில், அவர் ஓட்டலின் 22வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என்றும், அவரது உடல் ஓட்டலின் 14வது மாடியிலுள்ள வெளிப்புற இடத்தில் கைப்பற்றப்பட்டது என்றும், சப்போரோவில் நடக்க இருந்த படப்பிடிப்புக்கு வந்த சயாகா கண்டா, ஓட்டலில் தங்கியிருந்தபோது தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை. சயாகா கண்டா கடந்த ஆண்டு லீஜி மாட்சுமோட்டோ எழுதிய அறிவியல் புனைக்கதையில் அனிமேஷன் கதாபாத்திரமாக நடித்திருந்தார். கடந்த 17ம் தேதி ‘மை ஃபேர் லேடி’ என்ற இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் சயாகா கண்டா கலந்துகொண்டதாகவும், அதற்கடுத்த நாள் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றும் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர். கடந்த 2017ல் திருமணம் செய்துகொண்ட சயாகா கண்டா, 2 ஆண்டுகளுக்குப் பிறகு கணவரை விவாகரத்து செய்துவிட்டார். அவரது மரணம் குறித்த செய்தி வெளியானதும் அவருடைய ரசிகர்களும், சக நட்சத்திரங்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Stories: